Thursday, 25 August 2011

பகவத் கீதை


கிரு‌ஷ‌்ண பரமா‌த்மா கூறு‌கிறா‌ர், யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சமநோக்கு அல்லது பிரும்ம உணர்வு என்னும் முடிவை நோக்கிச் செல். இதுதான் வேதங்களும் உபநிடதங்களும் இதிகாச புராணங்களும் எண்ணற்ற பெரியோர்களும் மனிதனுக்குப் புகட்டும் முடிந்த முடிவான படிப்பினை.

எவ‌ன் ஒருவ‌ன் எதனாலு‌ம் ம‌கி‌ழ்வ‌தி‌ல்லையோ, துயர‌ப்படுவ‌தி‌ல்லையோ, எதையு‌ம், யாரையு‌ம் வெறு‌ப்ப‌தி‌ல்லையோ, எத‌ற்கு‌ம் ஆசை‌ப்படுவ‌தி‌ல்லையோ, ந‌ல்லது கெ‌ட்டது இர‌‌ண்டையு‌ம் துற‌ந்த மன‌ம் கொ‌ண்டவனா‌ய் எ‌ன்‌னிட‌த்‌தி‌ல் ப‌க்‌தி கொ‌‌ள்‌கிறானோ அவனே என‌க்கு ‌பி‌ரியமானவ‌ன்.

மேலு‌ம் ‌கிருஷ‌்ண‌ர் கூறு‌கிறார‌், பகைவனையு‌ம் - ந‌ண்பனையு‌ம், புகழையு‌ம் - ப‌ழியையு‌ம், கு‌‌ளிரையு‌ம் - வெ‌ப்ப‌த்தையு‌ம், இ‌ன்ப‌த்தையு‌ம் - து‌ன்ப‌த்தையு‌ம் சமமாக‌க் கொ‌ள்பவனு‌ம் என‌க்கு ‌பி‌ரியமானவனே!

No comments:

Post a Comment